யுவன் சங்கர் ராஜாவின் High On U1 இசை நிகழ்ச்சி வரும் ஜுலை 15ஆம் தேதி நடைபெறவுள்ளது இந்த மாபெரும் கலை நிகழ்ச்சி ட்ரா ஆசியா மற்றும் ஹோரிசான் குழுமம் இணை ஏற்பாட்டில் தாமரை ஜூவல்ஸ் ஆதரவுடன் நடைப்பெறயுள்ளது. ரசிகர்களுக்கு முழுமையான இசை அனுபவத்தினை வழக்கிடும் வகையில், ட்ரா ஆசியா அமெரிக்காவின் வூ ஷோ டிசைன் நிருவனுத்துடன் இணைத்து 360 பாகை மேடை மற்றும் அரங்கத்தினை வடிவமைத்துள்ளது.
பையா, மாமாக் குட்டி, மன்மதன், மங்காத்தா, ரைவ்டி பேபிஸ், லவ் டுடே மற்றும் ஹை ஒன் லவ் எனும் ஏழு பகுதிகள் அரங்கில் இடம்பெறவுள்ளன. இந்த இசை நிகழ்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு கடந்த ஜூன் 10 தேதி கோலாலம்பூர், EQ-வில் நடைபெற்றது.இதுவரை, 80 விழுக்காடு டிக்கெட்கள் விற்பனையாகியுள்ள வேளையில், 99 வெள்ளி முதல் 699 வெள்ளி வரையிலான டிக்கெட்டுகளை https://www.ticket2u.com.my/ என்ற வலைத்தளைத்தில் இன்றே பெற்றுகொள்ளலாம்.