இந்தியா, மே 11-
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் Thug Life திரைப்பட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. பிரபல நடிகர் சிம்புவும் இந்த பட பணிகளை துவங்கியுள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சுமார் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது நடித்து வருகிறார். Thug Life என்ற இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடைய மகனாக பிரபல நடிகர் சிலம்பரசன் நடித்து வருகிறார். ஏற்கனவே டெல்லியில் இந்த படப்பிடிப்பு பணிகளை நடிகர் சிம்பு மேற்கொண்டு வருகின்றார். அண்மையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலாது.
ஏற்கனவே பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது பட பணிகளை மேற்கொண்டு வந்து நடிகர் சிம்பு, அந்த படத்தை பாதியில் நிறுத்திவிட்டு தற்பொழுது Thug Life பட பணிகளை விறுவிறுப்பாக முடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பிரபல தயாரிப்பாளர் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேசன் அளித்த புகாரில் தங்களது கொரோனா குமார் படத்தில் நடிக்காதது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், Thug Life படத்தில் அவரை நடிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து சிம்பு அவர்களோ அல்லது Thug Life பட குழுவோ இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.