Jan 16, 2026
Thisaigal NewsYouTube
சூப்பர் சிங்கரில் பிரியங்காவுக்கு பதில் வேறொருவர்…
சினிமா

சூப்பர் சிங்கரில் பிரியங்காவுக்கு பதில் வேறொருவர்…

Share:

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை பற்றி பேச்சு எடுத்தாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தான்.

இவர்கள் இருவருடைய நகைச்சுவையான பேச்சு, நிகழ்ச்சியைக் கொண்டுச் செல்லும் விதம் மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. இளையோர் மற்றும் பெரியவர்கள் என இரண்டு பிரிவுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடக்கும். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நடைபெற்று வருகிறது.

பின்னணிப் பாடகர்கள் மனோ, சித்ரா மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் நடுவர்களாக உள்ளனர்.

இந்நிலையில், ரசிகர்களால் ரசித்து பார்க்கும் மா கா பா - பிரியங்கா ஜோடி இந்த வாரம் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இல்லை. பிரியங்காவின் திருமணம் அண்மையில் முடிந்த காரணத்தினால் அவர் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இல்லை.

அவருக்கு பதிலாக இந்த வாரம் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா தொகுத்து வழங்கவுள்ளார். அதனை விளம்பர வீடியோவுடன் அறிவித்துள்ளனர்.

Related News