நடிகர் சிம்பு, சிறு வயதிலேயே சினிமாவில் நுழைந்து வெற்றி, தோல்வி, சர்ச்சை, பிரச்சனை என எல்லாவற்றையும் சந்தித்தவர்.
ஆனால் எந்த ஒரு கஷ்டத்திலும் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்து சாதித்து வந்தார். கொரோனா நேரத்தை பயன்படுத்தி தனது உடல் எடையைக் குறைத்து இப்போது ஆளே மாறிவிட்டார்.
சிம்பு நடிப்பில் கடைசியாக கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியாகி இருந்தது.
படப்பிடிப்புகளில் பரபரப்பாக இருக்கும் சிம்பு நிகழ்ச்சி ஒன்றுக்காக மலேசியா வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியை முடித்தவர் சிப்பாங்கில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டிருக்கும் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார்.
சிம்பு-அஜித் சந்தித்துள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.








