Oct 20, 2025
Thisaigal NewsYouTube
சமூக சீர்திருத்த கருத்துக்கள், கலக்கிய சின்னக் கலைவாணர்- அவரின் மறக்கமுடியாத 5 கதாபாத்திரங்கள்
சினிமா

சமூக சீர்திருத்த கருத்துக்கள், கலக்கிய சின்னக் கலைவாணர்- அவரின் மறக்கமுடியாத 5 கதாபாத்திரங்கள்

Share:

இந்தியா, ஏப்ரல் 20-

சரியாக 37 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல இயக்குனார் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் தான் விவேகானந்தன் என்கிற விவேக்.

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "மனதில் உறுதி வேண்டும்", "புது புது அர்த்தங்கள்" மற்றும் "ஒரு வீடு இரு வாசம்" போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் தான் விவேக். துவக்கத்தில் காமெடியனாக மட்டுமே இவர் வலம் வந்தாலும், ஒரு கட்டத்தில் தனக்கென தனி பாதை வகுத்து அதில் பயணம் செய்ய தொடங்கினார்.

விவேக் என்ற பெயரில் திரையுலகில் அறிமுகமான விவேகானந்தன், பிற்காலத்தில் ஜனங்களின் கலைஞனாக மாறினார் என்றால் அது மிகையல்ல அவருடைய நடிப்பில் வெளிவந்த சில சுவாரசியமான கதாபாத்திரங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். நடிகர் விக்ரமின் மிக நெருங்கிய நண்பர்களில் விவேக் அவர்களும் ஒருவர்.

இந்நிலையில் விக்ரமின் "சாமி" திரைப்படத்தில் "வெங்கட்ராமன்" என்ற கதாபாத்திரத்தில் தீண்டாமையை பற்றி மிக போல்டாக பல விஷயங்களை அவர் பேசியிருப்பார். மீண்டும் தனது நண்பர் விக்ரம் நடிப்பில் வெளியான "காதல் சடுகுடு" என்கின்ற திரைப்படத்தில் "சூப்பர் சுப்பு" என்கின்ற கதாபாத்திரத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த பல விழிப்புணர்வுகளை அவர் ஏற்படுத்தியிருப்பர்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான "திருமலை" என்கின்ற திரைப்படத்தில் "பழனி" என்கின்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்த விவேக், மனிதர்கள் ஜோசியம் போன்ற பிற விஷயங்களை மட்டுமே நம்பி முடங்கி கிடக்க கூடாது என்பதை வலியுறுத்தும் ஒரு மிகச்சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றிருப்பார்.

அதேபோல தளபதி விஜய் நடிப்பில் வெளியான "யூத்" திரைப்படத்தில் "கருத்து கந்தசாமி" என்கின்ற கதாபாத்திரம் மூலமாக மக்களிடம் உள்ள மூட நம்பிக்கைகள் மற்றும் பிரபல சமூக கருத்துக்களை அந்த திரைப்படத்தில் மிகவும் போல்டாக பேசியிருப்பார். அதேபோல பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான "ரன்" திரைப்படத்தில் சென்னை பட்டணத்தை நம்பி வரும் ஏமாந்த சில இளைஞர்களுடைய வாழ்க்கை அப்படியே பிரதிபலிக்கும் வண்ணம் நடித்திருப்பார்.

Related News