Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஹீரோவாகும் இயக்குனர் ஷங்கரின் மகன்
சினிமா

ஹீரோவாகும் இயக்குனர் ஷங்கரின் மகன்

Share:

இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்ட படங்கள் இயக்குவதற்குப் பெயர் போனவர். அவர் கடைசியாக இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் பெரிய தோல்வி அடைந்தன. அடுத்து அவர் இந்தியன் 3ம் பாகத்தை இயக்கப் போகிறார் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷங்கரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஷங்கர் குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு நடிகர் வர இருக்கிறார்.

ஷங்கரின் மகன் அர்ஜித் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் அவர் பணியாற்றுகிறாராம்.

இந்நிலையில் அர்ஜித் ஷங்கர் விரைவில் ஹீரோவாக அறிமுகம் ஆக இருக்கிறார். அட்லீயின் உதவியாளராக இருந்தவர் தான் இப்படத்தை இயக்கப் போகிறாராம்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.

Related News