Oct 20, 2025
Thisaigal NewsYouTube
'படையப்பா' படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கவிருந்தது இந்த நடிகையா.?: ஹிட் காம்போவாச்சே இவுங்க.!
சினிமா

'படையப்பா' படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கவிருந்தது இந்த நடிகையா.?: ஹிட் காம்போவாச்சே இவுங்க.!

Share:

இந்தியா, பிப்ரவரி 26 -

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான 'படையப்பா' படம். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரிலீஸ் ஆன இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இன்றளவும் ரஜினி ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இப்படம் உள்ளது. இந்த சூழலில் 'படையப்பா' படம் குறித்து யாரும் அறியாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆரம்பத்தில் இப்படத்தின் ஹீரோயின் மாற்றப்பட்டது குறித்து லேட்டஸ்ட்டாக செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மணிவண்ணன், ராதாரவி, அப்பாஸ், நாசர், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'படையப்பா'. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். ரிலீசான காலக்கட்டத்தில் திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'படையப்பா', 90 கிட்ஸ்களின் நியாபகங்களில் இப்படத்திற்கு முக்கியமான இடமுண்டு.

அது மட்டும் இல்லாமல் இன்றும் டிவிக்களில் இப்படம் போடப்படுவதை அறிந்தால், உடனே ரசிகர்கள் டிவி முன்னாடி ஆஜர் ஆகி விடுவார்கள். இன்றைய தலைமுறைகளும் இப்படத்தை டிவியில் பார்த்து வாவ் சொல்வார்கள். அந்தளவுக்கு ரஜினியின் ஸ்டைலும், விறுவிறுப்பான கதைக்களமும், கே.எஸ். ரவிக்குமாரின் மேக்கிங்கும் இப்படத்தில் வேறலெவலில் அமைந்தது.

பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இப்படத்தின் ஒவ்வொரு வசனமும் இன்றளவும் பிரபலம். குறிப்பாக நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் செய்தவற்றை யாராலும் மறக்க முடியாது. 'வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு இன்னும் போகலை' என படையப்பா ரஜினியை பார்த்து ராமா கிருஷ்ணன் பேசும் வசனம் இன்றும் தலைவருக்கு பொருத்தமாக உள்ளது.

மேலும் இப்படத்தில் மற்றொரு ஹைலைட் என சௌந்தர்யாவின் கேரக்டரை சொல்லலாம். அருணாச்சலம் படத்தை தொடர்ந்து இப்படத்திலும் ரஜினியின் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவரின் க்யூட்டான நடிப்பு படத்தை மேலும் மெருகேற்றியது. இந்நிலையில் 'படையப்பா' படத்தில் முதலில் ரஜினி ஜோடியாக நடிக்கவிருன்தது நக்மா தானாம். ஏற்கனவே பாட்ஷா படத்தில் ரசிகர்களை கவர்ந்த இந்த ஜோடி படையப்பாவிலும் இணைய இருந்திருக்கின்றனர்.

Related News