Oct 18, 2025
Thisaigal NewsYouTube
கைவிடப்பட்டதா இந்தியன் 3?
சினிமா

கைவிடப்பட்டதா இந்தியன் 3?

Share:

இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தியன் 2 திரைப்படத்தின் முடிவில் இந்தியன் 3 திரைப்படத்திற்கான டிரெய்லர் இடம் பெற்றிருக்கும். இந்த எதிர்மறை கருத்தினால் இந்தியன் 3 திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள், திரையரங்கில் வெளியாக வாய்பில்லை போன்ற செய்திகள் பரவின.

இந்நிலையில், இந்தியன் 3 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் பரபரப்பாக இருப்பதால் 'இந்தியன் 3' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு குறைவு என கூறப்பட்டுள்ளது.

மேலும், லைகா நிறுவனம் இப்படத்தில் இருந்து பின்வாங்கியதாகவும், நெட்பிலிக்ஸ் தங்களது ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இந்தியன் 3 கைவிடப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

Related News