Oct 20, 2025
Thisaigal NewsYouTube
சைலண்டாக சம்பவம் செய்த 'டபுள் டக்கர்'!
சினிமா

சைலண்டாக சம்பவம் செய்த 'டபுள் டக்கர்'!

Share:

இந்தியா, ஏப்ரல் 16-

புதுமையான அனிமேஷன் கதாபாத்திரங்களுடன், குழந்தைகளை கவரும் விதத்தில் வெளியாகியுள்ள 'டபுள் டக்கர்' திரைப்படம் 2-ஆவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டபுள் டக்கர். ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்டோர் பலர் நடித்து இருந்தார்கள். கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான 'டபுள் டக்கர்' ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது. பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டி வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு பெருமளவில் கிடைத்துள்ளது.

புதுமுக நடிகர்கள் நடிப்பில், குறைந்த பட்ஜட்டுடில் எடுக்கப்படும் படங்கள் ஒரு வாரம் திரையரங்கில் ஓடுவது அதிசயமாக இருக்கும் நிலையில், இப்படம் சைலண்டாக அப்படி ஒரு சம்பவத்தை செய்துள்ளது. இதுவரை ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து. 2வது வாரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருப்பதாக படக்குழுவினர் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும் இப்படத்திற்கு குழந்தைகள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News