Oct 20, 2025
Thisaigal NewsYouTube
ஜெய் ஹோ பாடலை நிராகரித்த ஹிந்தி ஹீரோ...
சினிமா

ஜெய் ஹோ பாடலை நிராகரித்த ஹிந்தி ஹீரோ...

Share:

இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரை உச்சத்திற்குக் கொண்டு சென்று ஆஸ்கார் விருது வென்று கொடுத்தப் பாடல் ஜெய் ஹோ. அதனை யாரும் மறக்க முடியாது. உலக அளவில் அவரை பிரபலமாகியதும் அப்பாடல் இடம் பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் அந்த படம் தான். ஆனால் அந்த பாடலை ரஹ்மான் முதலில் ஒரு ஹிந்தி முன்னணி ஹீரோவுக்கு தான் உருவாக்கினாராம்.

அந்த பாடலை சல்மான் கானின் யுவ்ராஜ் படத்திற்காகத் தான் ரஹ்மான் ஜெய் ஹோ பாடலை இசையமைத்தார். ஆனால் அந்த பாடல் வேண்டாம் என படத் தரப்பினர் கூறிவிட்டார்களாம். அதன் பிறகு அதை பிரிட்டிஷ் இயக்குனர் Danny Boyleக்கு கொடுத்து ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த பாடல் தான் ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதும் பெற்றுக் கொடுத்தது.

Related News