கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-
கோலாலம்பூர் துங்கு அப்துல் ரஹ்மான் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி வீடுகளிலிருந்து கீழே விழுந்த சம்பங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அதன் முக்கியத் தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பல்லைக்கழகத்தின் அருகிலேயே நடந்த இந்தச் சம்பவத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதில் அந்த பல்கலைக்கழகம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று முன்னாள் மாணவர் சங்கம் இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.








