கோலாலம்பூர், டிசம்பர்.03-
கோலாலம்பூர், புடுவில் பிக்கல்பால் விளையாட்டுத் தளம் வீற்றிருக்கும் மூன்றாவது மாடியில் கட்டடத்தின் வேலியோரத்தில் விழுந்த பந்தை எடுக்கும் முயற்சியில் ஆடவர் ஒருவர் கால் இடறி கீழே விழுந்து மரணமுற்றார்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்தது. இதில் 32 வயதுடைய நபர் மரணமுற்றதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
கீழே விழுந்த பந்தை எடுப்பதற்காக அந்த நபர் வேலி மீது ஏறிய போது கால் இடறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலையில் கடும் காயங்களுக்கு ஆளான அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று லாஸிம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.








