Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

Share:

சமூக ஊடகங்கள் மற்றும் உடனடி செய்தி அனுப்பும் தளங்கள் மூலம் பொய்யான தகவல்களையோ, அவதூறுகளையோ பரப்ப வேண்டாம் என இளைஞர்களை பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாரானி முகமது வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் நல்லிணமும், அமைதியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் இதனைக் கடைப்பிடிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் அமைதியை காக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

உலகின் பல பகுதிகளில் போர் அச்சுறுத்தல் காரணமாக, முஸ்லிம்கள் அமைதியான சூழலில் நோன்பு திறக்க முடியாத நிலை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நமது கைகளில் உள்ள செல்போன்களுக்குள், துப்பாக்கிக் குண்டுகளும், நஞ்சும் இருப்பதாக சாரானி முகமது தெரிவித்துள்ளார்.

வாட்சாப் செயலியின் மூலம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு பகிரும் முன், அச்செய்தி உண்மையா, பொய்யா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுதியுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு