ஜொகூர்,ஜூலை 21-
இன்று காலை ஜொகூர், Pantai Batu Layar கடல்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த இரு ஆடவர்கள் கடலில் மூழ்கியதில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனவும் மற்றொரு ஆடவர் காப்பாற்றப்பட்டார் என Pungga வட்டார தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி செயல்முறை கொமண்டர் Mohammad Saifulizam Mohd Rofi தெரிவித்தார்.
கடலில் குளித்துக் கொண்டிருந்த இருவரும் அலையில் மாட்டிக் கொண்டிருந்த சம்பவத்தை பொதுமக்கள் சிலர் கண்டுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.
மாலை மணி 3.30 அளவில் Muhammad Syahmie Zamzam என்ற 26 வயது ஆடவரின் உடல் சம்பவம் நடந்த இடத்தின் 100 மீட்டரில் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளது என Mohammad Saifulizam கூறினார்.








