Sep 28, 2026
Thisaigal NewsYouTube
சுட்டெரிக்கும் வெயிலையும் மிஞ்சிய ஆர்வம்: பினாங்கில் களைகட்டும் ரிக் ஷா  பயணம்
தற்போதைய செய்திகள்

சுட்டெரிக்கும் வெயிலையும் மிஞ்சிய ஆர்வம்: பினாங்கில் களைகட்டும் ரிக் ஷா பயணம்

Share:

பினாங்கில் நிலவி வரும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பாரம்பரிய ரிக் ஷா பயணத்தில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யுனெஸ்கோ பாரம்பரிய நகரமான ஜார்ஜ் டவுனின் அழகிய வீதிகளைச் சுற்றிப் பார்க்க, ரிக் ஷாவே சிறந்த வழியாகத் திகழ்கிறது. "வெயில் சுட்டெரித்தாலும், ரிக் ஷா- வில் அமர்ந்து மெல்லிய காற்றை அனுபவித்தபடி நகரின் கலைநயமிக்க சுவரோவியங்களை ரசிப்பது தனி சுகம்," எனச் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

வெப்பம் காரணமாக ரிக் ஷா ஓட்டுநர்கள் குடைகளையும் தொப்பிகளையும் பயன்படுத்தினாலும், பயணிகளின் வருகை குறையாதது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. விடுமுறை காலம் என்பதால், காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதாகவும், இதனால் வருமானம் விறுவிறுப்பாக இருப்பதாகவும் ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

நவீன வாகனங்கள் பல வந்தாலும், பினாங்கின் குறுகிய வீதிகளில் மெதுவாக ஊர்ந்து செல்லும் இந்த 'விண்டேஜ்' ரிக் ஷாப் பயணம், வெயிலையும் தாண்டி இன்றும் தனது மவுசைத் தக்கவைத்துள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்