Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சட்ட விரோதப் பண மாற்றம் : என்ஜிஓ தலைவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சட்ட விரோதப் பண மாற்றம் : என்ஜிஓ தலைவர் கைது

புத்ராஜெயா, ஜூன்.25-

சட்ட விரோதப் பண மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் அரச சாரா இயக்கம் ஒன்றின் என்ஜிஓ தலைவர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், லஞ்சப் பணத்தைச் சொந்த வங்கிக் கணக்கிலும், தனது நிறுவனக் கணக்கிலும், தனது உறவினர்கள் கணக்கிலும் மாற்றியதாகக் கூறப்படுகிறது.

இன்று காலையில் புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த என்ஜிஓ தலைவரை வரும் ஜுன் 28 ஆம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →