Jul 5, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரர் மீது வாகனத்தை மோதி தப்ப முயற்சி; இரு மாணவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரர் மீது வாகனத்தை மோதி தப்ப முயற்சி; இரு மாணவர்கள் கைது

Share:

சிரம்பான், ஜூலை.05-

நெகிரி செம்பிலானில் உள்ள தாமான் பஞ்சோர் ஜெயா பகுதியில் நடைபெற்ற ' Ops Samseng Jalanan' சோதனையின் போது, சாலைத் தடுப்பை மீறி தப்ப முயன்ற 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் போலீஸ் அதிகாரி மீது வாகனத்தை மோதிக் காயப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் அந்த போலீஸ் அதிகாரியின் தலை, வலது கணுக்கால், வலது கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அவருக்கு Tuanku Ja'afar மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, போதைப்பொருள் பரிசோதனையில் மாணவர்கள் இருவருக்கும் எதிர்மறை முடிவுகள் வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாகனத்தை ஓட்டிச் சென்ற 14 வயது மாணவரை இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

போதைப் பொருட்களால் சீரழியும் இளைய தலைமுறை: நாடெங்கிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடிமையாகியுள்ளதாக ஏஏடிகே கவலை

போதைப் பொருட்களால் சீரழியும் இளைய தலைமுறை: நாடெங்கிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடிமையாகியுள்ளதாக ஏஏடிகே கவலை

நண்டுப் பொறிகளைப் பார்வையிடச் சென்றவர் சதுப்பு நீரில் சடலமாக மீட்பு

நண்டுப் பொறிகளைப் பார்வையிடச் சென்றவர் சதுப்பு நீரில் சடலமாக மீட்பு

பிக்கப், ஜீப் வாகனங்களுக்கு மாதம் 300 லிட்டர் மானிய டீசல் - 2 லட்சம் பேர் பயனடைகின்றனர்

பிக்கப், ஜீப் வாகனங்களுக்கு மாதம் 300 லிட்டர் மானிய டீசல் - 2 லட்சம் பேர் பயனடைகின்றனர்

வணிக வளாகங்களிலும் வெள்ளிக்கிழமை தொழுகை - மாநிலங்களுக்கு அமைச்சர் சுல்கிப்ளி அழைப்பு

வணிக வளாகங்களிலும் வெள்ளிக்கிழமை தொழுகை - மாநிலங்களுக்கு அமைச்சர் சுல்கிப்ளி அழைப்பு

மலேசியாவின் 1.06 பில்லியன் இழப்பீட்டு கோரிக்கை: பேச்சுவார்த்தை கோரிய நார்வே நிறுவனம்

மலேசியாவின் 1.06 பில்லியன் இழப்பீட்டு கோரிக்கை: பேச்சுவார்த்தை கோரிய நார்வே நிறுவனம்

மலேசியா–சிங்கப்பூர் எல்லையில் புதிய டிஜிட்டல் குடிநுழைவு முறை: ஜனவரியில் அறிமுகம் – அன்வார் அறிவிப்பு

மலேசியா–சிங்கப்பூர் எல்லையில் புதிய டிஜிட்டல் குடிநுழைவு முறை: ஜனவரியில் அறிமுகம் – அன்வார் அறிவிப்பு