Jul 18, 2026
Thisaigal NewsYouTube
நண்டுப் பொறிகளைப் பார்வையிடச் சென்றவர் சதுப்பு நீரில் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

நண்டுப் பொறிகளைப் பார்வையிடச் சென்றவர் சதுப்பு நீரில் சடலமாக மீட்பு

Share:

டுங்குன், ஜூலை.05-

திரெங்கானு மாநிலம், பக்கா அருகே, கம்போங் தெபிங் தெம்பா பகுதியில், நண்டு பொறிகளைப் பார்வையிடச் சென்ற 36 வயது ஆடவர் ஒருவர் சதுப்பு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Mohd Afiq Ahmad என்ற 36 வயது ஆடவர், நேற்று காலை 10 மணியளவில், வீட்டிலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதுப்பு நிலத்தில் வைத்திருந்த நண்டுப் பொறிகளைப் பார்வையிடச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், அவர் மாயமானதாக குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், தீயணைப்பு வீரர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் அவரது உடல் சதுப்பு நீரிலிருந்து மீட்கப்பட்டது.

இதனிடையே, Mohd Afiq Ahmad-க்கு வலிப்பு நோய் இருப்பதால், சதுப்பு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Related News