Dec 5, 2025
Thisaigal NewsYouTube
வாழ்க்கைச் செலவின பிரச்னையை - கையாள கூட்டுறவு நடவடிக்கைகள் உதவும்
தற்போதைய செய்திகள்

வாழ்க்கைச் செலவின பிரச்னையை - கையாள கூட்டுறவு நடவடிக்கைகள் உதவும்

Share:

பெட்டாலிங் ஜெயா, நவ. 23 - அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின பிரச்னையை கையாளுவதற்கு மாஸ்கோப் எனப்படும் கூட்டுறவு சமூகமயமாக்கல் திட்ட அமலாக்கத்தை மக்கள் மத்தியில் கூட்டுறவு கலாச்சாரத்தை விதைக்கும் முயற்சியாக நோக்கும்படி தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ எவோன் பெணடிக் கேட்டு கொண்டார்.

மக்களின் சமூகவியல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிறைய கூட்டுறவுக் கழகங்கள் தோற்றுவிக்கும் நோக்கத்தை தங்கள் தரப்பினர் கொண்டிருப்பதாக அமைச்சர் விளக்கினார்.

குறிப்பாக, பி40 தரப்பு, மாற்றுத்திருநாளிகள், நகரப்புற ஏழைகள், புறநகர் மற்றும் ஒதுக்குப் புறமான பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் இத்தகைய கூட்டுறவு கழகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வழியுறுத்தினார்.

தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு அமைச்சுடன் Co-op Bank Pertama கூட்டுறவு வங்கியுடன் இணைந்து கூட்டுறவு சமூகமயமாக்கல் திட்டத்தை மாஸ்கோப் நேற்று அங்காசா ஆடிட்டோரியத்தில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் எவோன் பெணடிக் இதனை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கடன் கூட்டுறவுகளுக்கு 10 வெள்ளி மில்லியன் நிதியை வழங்கும் கோஸ்டார்ட் நிதியளிப்பு திட்டத்தையும் அமைச்சர் தொடக்கி வைத்தார்.

500 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியானது, கூட்டுறவு பற்றிய பொதுமக்களின் அறிவை அதிகரிப்பதோடு, கூட்டுறவுகளின் உணர்வை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கூட்டுறவு இயக்கம் வழங்கும் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் இந்த திட்டம் உள்ளது.

இந்நிகழ்வில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணை அமைச்சர் செனட்டர் புவான் சரஸ்வதி கந்தசாமி, அந்த அமைச்சின் துணை தலைமை செயலாளர் டத்தோ ஹாஜி ஜம்ரி பின் சல்லே, மற்றும் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்