Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக் பகுதியில் உள்ள The Avenue Club அருகே, இன்று அதிகாலை இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில், பெண் ஒருவர் உடம்பில் சுமார் 70 விழுக்காடு தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்.

மேலும் இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

இன்று அதிகாலை 5.21 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததையடுத்து, ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து, எட்டு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்விபத்தில், பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற பியூஜியோ கார் மற்றும் இருவர் பயணித்த டொயோட்டா வெல்ஃபையர் வாகனம் ஆகியவை விபத்தில் சிக்கியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை அடைந்த போது, பியூஜியோ காரானது முற்றிலும் எரிந்து தீக்கிரையாகி இருந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும், 20 வயதான அப்பெண் ஓட்டுநர் பொதுமக்களால் ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தார் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு