SRC International வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பையும், 12 ஆண்டு கால சிறைத் தண்டனையையும் ரத்து செய்யக் கோரி செய்து கொண்ட சீராய்வு மனு, கூட்டரசு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது, ஏமாற்றம் அளிக்கிறது என்ற நஜீப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவில் 4 க்கு 1 என்ற அளவில் நஜீப்பின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது, வருத்தம் அளிக்கிறது. ஒரு நீதிபதி மட்டுமே நஜீப்பிற்கு எதிரான தீர்ப்பை எதிர்த்துள்ளார் என்று கூட்டரசு நீதிமன்ற கட்டட வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஷாபி அப்துல்லா இதனை தெரிவித்தார்.
நீதிமன்ற விசாரணை நடைமுறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சபா, சரவா தலைமை நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லி, ஒருவர் மட்டுமே கூட்டரசு நீதிமன்ற நடைமுறைகள் 137 ஆவது விதியை, மிகத் தெளிவாக மேற்கோள்காட்டி தனது முடிவை அறிவித்துள்ளார்.
மற்ற நான்கு நீதிபதிகள் கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இது நஜீப்பிற்குச் சரியாக நீதி கிடைக்கவில்லை என்பதையே காட்டுகிறது என்று ஷாபி அப்துல்லா குறிப்பிட்டார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


