Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

Share:

கோலாலம்பூர், மார்ச்.10-

கேஎல்ஐஏ விமான நிலையத்தின் 3-ஆவது ஓடுபாதையின் மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாகவே நிறைவடைந்ததால், 7 நாட்களுக்கு முன்பே முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24 முதல் 26-ஆம் தேதி வரையில், ஓடுபாதையானது முழுமையாக மூடப்பட்ட நிலையில், இந்த மேம்பாட்டு பணிகளானது, தொடங்கப்பட்டதாக கேஎல்ஐஏ நிர்வாகம் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் மீதமுள்ள பணிகள் தொடர்ந்த போது, குறைக்கப்பட்ட அமைப்பின் மூலமாக விமானப் புறப்பாடுகள் செயல்படுத்தப்பட்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் மார்ச் 17 ஆம் தேதி, மீண்டும் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஓடுபாதையானது, 7 நாட்களுக்கு முன்பே முழுமையாகச் செயல்படத் தொடங்கி விட்டதாகவும் கேஎல்ஐஏ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு