May 4, 2026
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

Share:

பெசுட், மார்ச்.10-

Universiti Sultan Zainal Abidin பல்கலைக்கழகத்தின் Besut வளாகத்தில் பணியாற்றி வந்த விரிவுரையாளர் ஒருவர், Kampung Gelam Emas பகுதியில் உள்ள தனது வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார்.

49 வயதான Tajul Afif Abdullah, முந்தைய நாளில் பணிக்கு வராததால், அவர் குறித்து கவலையடைந்த பணியாளர்கள் இருவர், வீட்டிற்குச் சென்று பார்த்த போது, அவர் இறந்தது தெரிய வந்துள்ளது.

அந்த விரிவுரையாளரின் சடலமானது கண்டறியப்படுவதற்கு, 24 மணி நேரத்திற்கு முன்பே அவர் உயிரிழந்திருந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Besut மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Rozaime Ab Rahim தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சவப்பரிசோதனையில் எந்த வித குற்றச் செயல்களும் நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே இதய பிரச்சினைக் கொண்ட Tajul Afif, அதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Related News