கோலாலம்பூர், அக்டோபர்.28-
நாடுகளுக்கு இடையிலான இரு வழி பரஸ்பர உறவு என்பது சொல்வத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இன்று தெளிவுபடுத்தினார்.
பரஸ்பர உறவு என்பது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் மலர்கிறது என்று இன்று நிறைவுடைந்த ஆசியான் மாநாட்டில் விளக்கினார்.
ஒரு நாடு, மற்றொரு நாட்டுடனான உறவுகளை வளர்ப்பதே மலேசியாவின் நிலைப்பாடாகும். ஒரு நாட்டின் செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த உறவுகள் வளர்க்கப்படுவது அல்ல. மாறாக, நேர்மை மற்றும் மரியாதையை அடிப்படையாகக் கொண்டு இந்த பரஸ்பரம் காக்கப்படுகிறது என்று பிரதமர் விளக்கினார்.








