Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை
தற்போதைய செய்திகள்

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

Share:

பேராக் மாநிலத்தில் உள்ள ஆலயம் ஒன்றில், சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், 33 வயதான ஆடவருக்கு ஈப்போ மேஜிஸ்திரேட் நீதிமன்றம் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மரச்சாமான்கள் விற்பனைக் கடை ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றும் அந்நபர், குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கானது, குற்றவியல் சட்டம் பிரிவு 295-இன் கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை,சன்வே சிட்டியிலுள்ள அந்த ஆலயத்தின் பலிபீடத்தை அவர் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த அன்று காலை 8 மணியளவில், போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், ஆலய கண்காணிப்பு கேமரா பதிவுகளில், அவர் சேதப்படுத்திய காட்சிகள், தெளிவாக பதிவாகியிருந்ததாக நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

Related News

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்