May 5, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது
தற்போதைய செய்திகள்

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

Share:

சபா மாநிலம் கினபாடாங்கான் பகுதியில் உள்ளகம்பங் செகாலியுட் ஆற்றில் முதலை தாக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் இன்று காலை மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

28 வயதான ரய்யான் அப்துல்லா நேற்று இரவு, தனது தந்தையுடன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது முதலை தாக்கியதாக நம்பப்படுகின்றது.

இதனையடுத்து, நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில், இன்று காலை 9.55 மணியளவில், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், அவரது உடல் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கினபாடாங்கான் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைத் தலைவர் ஹைரி ஓது தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட உடலில் கை கால்கள் போன்ற உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.

இச்சம்பவமானது அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News