Jun 6, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தானில் 355,000 ரிங்கிட் மதிப்புள்ள 59,000 லிட்டர் டீசல் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

குவாந்தானில் 355,000 ரிங்கிட் மதிப்புள்ள 59,000 லிட்டர் டீசல் பறிமுதல்

Share:

குவாந்தான், மே.05-

குவாந்தானில் உள்ள மலேசியா-சீனா தொழில்துறை பூங்கா ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 3 லட்சத்து 55 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள, 59 ஆயிரம் லிட்டர் டீசலை, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீனத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சோதனையானது ‘Op Tiris 4.0’ என்ற சிறப்பு நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் பகாங் மாநில இயக்குநர் ஜெஸ்லிலி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், முறையான உரிமம் இன்றி டீசல் சேமித்து வைக்க அந்த வளாகமானது பயன்படுத்தப்பட்டு வந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 57 ஆயிரம் லிட்டர் டீசல் கொண்ட ஐந்து கொள்கலன் தொட்டிகளும், சுமார் 2,000 லிட்டர் டீசல் ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜெஸ்லிலி ஜமாலுடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்