Jun 25, 2026
Thisaigal NewsYouTube
அலோர் காஜா அருகே 8 இந்திய சுற்றுலாப் பயணிகளுடன் வேன் விபத்து – போதைப்பொருள் பயன்படுத்திய ஓட்டுநர் கைது
தற்போதைய செய்திகள்

அலோர் காஜா அருகே 8 இந்திய சுற்றுலாப் பயணிகளுடன் வேன் விபத்து – போதைப்பொருள் பயன்படுத்திய ஓட்டுநர் கைது

Share:

அலோர் காஜா, மே.05-

மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தென்பாதையில், கிலோமீட்டர் 212 பகுதியில், நேற்று சுற்றுலா வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்த விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த 8 பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.

காலை சுமார் 10.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததில், அந்த வாகன ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதிச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

இந்த விபத்தில் 52 வயதான ஒருவரும், 13 மற்றும் 9 வயதுடைய இரு சிறுவர்களும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விசாரணைக்கு உதவுவதற்காக, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் இன்று செவ்வாய்க்கிழமை அலோர் காஜா நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவரை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் என்று அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.

Related News

அனைத்துலக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தற்காப்பு அமைச்சு இரண்டு புதிய உத்திகளை உருவாக்கியுள்ளது

அனைத்துலக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தற்காப்பு அமைச்சு இரண்டு புதிய உத்திகளை உருவாக்கியுள்ளது

பத்து காஜா சீர்திருத்த மையம்:  மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது

பத்து காஜா சீர்திருத்த மையம்: மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கில் மலேசியா 33 சதவீதத்தை எட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கில் மலேசியா 33 சதவீதத்தை எட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

போலீஸ் படைத் தலைவருக்கு எதிரான இந்திரா காந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

போலீஸ் படைத் தலைவருக்கு எதிரான இந்திரா காந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

200 லிட்டருக்கும் மேல் பெட்ரோல் பயன்படுத்தியவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவு என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

200 லிட்டருக்கும் மேல் பெட்ரோல் பயன்படுத்தியவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவு என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

புதருக்குள் மனித மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது

புதருக்குள் மனித மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது