Jun 25, 2026
Thisaigal NewsYouTube
அனைத்துலக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தற்காப்பு அமைச்சு இரண்டு புதிய உத்திகளை உருவாக்கியுள்ளது
தற்போதைய செய்திகள்

அனைத்துலக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தற்காப்பு அமைச்சு இரண்டு புதிய உத்திகளை உருவாக்கியுள்ளது

Share:

அனைத்துலக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், 2026 முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கான தேசிய பாதுகாப்பு மூலோபாயத் திட்டம் மற்றும் பாதுகாப்பு திறன் வரைபடம் ஆகிய இரு முக்கிய உத்திகளைப் தற்காப்பு அமைச்சர் உருவாக்கியுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போன்ற பகுதிகளில் நிலவும் ஆயுத மோதல்கள் அனைத்துலக ஸ்திரத்தன்மையை பாதித்து வரும் வேளையில், மலேசியாவின் தற்காப்புத் திறனை மேம்படுத்த இந்தத் திட்டங்கள் மிக அவசியமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தயார்நிலை, விண்வெளி மற்றும் இணையப் பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ராணுவ வீரர்களின் நலன்புரி திட்டங்கள் உள்ளிட்ட ஏழு முக்கிய தூண்களின் அடிப்படையில் இந்த தேசிய பாதுகாப்பு மூலோபாயத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் தற்காப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த மார்ச் 2026 இல் மூன்று நடுத்தர உயர ஆளில்லா விண்கலங்கள் லபுவான் விமானப்படை தளத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக டத்தோ ஸ்ரீ முகமது காலிட் கூறினார்.

மேலும், இலகுரக போர் விமானங்கள், கடல்சார் ரோந்து விமானங்கள் மற்றும் அலைக்கற்றை ஆதிக்கம் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்காப்புப் படைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கான ஆறு புதிய வீட்டுவசதி திட்டங்கள், 20,000 வீடுகளைப் பராமரித்தல் மற்றும் புதிய பாலிகிளினிக் வசதிகள் போன்ற நலன்புரி திட்டங்களுக்கும் இந்த இலக்குகளின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்துள்ளது.

Related News

பேராக்கில் டிங்கி பாதிப்பு அதிரடி உயர்வு: 1,248 சம்பவங்கள் பதிவு; ஒருவர் மரணம்

பேராக்கில் டிங்கி பாதிப்பு அதிரடி உயர்வு: 1,248 சம்பவங்கள் பதிவு; ஒருவர் மரணம்

காரில் ஆடவர் சடலமாக மீட்பு

காரில் ஆடவர் சடலமாக மீட்பு

பத்து காஜா சீர்திருத்த மையம்:  மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது

பத்து காஜா சீர்திருத்த மையம்: மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கில் மலேசியா 33 சதவீதத்தை எட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கில் மலேசியா 33 சதவீதத்தை எட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

போலீஸ் படைத் தலைவருக்கு எதிரான இந்திரா காந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

போலீஸ் படைத் தலைவருக்கு எதிரான இந்திரா காந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

200 லிட்டருக்கும் மேல் பெட்ரோல் பயன்படுத்தியவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவு என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

200 லிட்டருக்கும் மேல் பெட்ரோல் பயன்படுத்தியவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவு என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது