Jun 25, 2026
Thisaigal NewsYouTube
200 லிட்டருக்கும் மேல் பெட்ரோல் பயன்படுத்தியவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவு என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

200 லிட்டருக்கும் மேல் பெட்ரோல் பயன்படுத்தியவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவு என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

Share:

புடி மடானி ரோன்95 திட்டத்தின் கீழ் 14மில்லியன் பயனர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான பயனர்களே மாதத்திற்கு 200 லிட்டருக்கும் அதிகமான பெட்ரோலைப் பயன்படுத்தியுள்ளனர் என்று இரண்டாம் நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்ஸா அசிசான் தெரிவித்துள்ளார்.

மைகாட் தரவுகளின்படி, 80 சதவீதத்திற்கும் அதிகமான டீசல் பயனர்கள் மாதத்திற்கு 200 லிட்டருக்கும் குறைவாகவே பயன்படுத்துகின்றனர் என்பதால் தற்போதைய மானிய அளவு போதுமானதாக உள்ளது என்று டத்தோ ஸ்ரீ அமீர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய கிழக்கு மோதல்களால் எரிபொருள் மானியச் சுமை கிட்டத்தட்ட RM5 பில்லியனாக உயர்ந்துள்ள வேளையில், சபா மற்றும் சரவாக்கில் டீசல் கடத்தப்படுவதைத் தடுக்கவும் முறைகேடுகளைக் களையவும் நாடு தழுவிய அளவில் மானியமில்லா சில்லறை விலை நிர்ணயம் அவசியமாகிறது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related News