Jul 18, 2026
Thisaigal NewsYouTube
புதருக்குள் மனித மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

புதருக்குள் மனித மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது

Share:

நேற்று புதருக்குள் மனித மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சபா, லகாட் டத்து, தாமான் பெர்தாமா 1 பகுதியில் பொதுமக்களால் காலை 10.45 மணியளவில் கண்டறியப்பட்ட இந்த மண்டை ஓடு குறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மண்டை ஓட்டைக் கைப்பற்றி மேலதிக விசாரணைக்காக லகாட் டத்து மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போதைய நிலைக்கு, இது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது குடும்ப உறுப்பினர்களை இழந்திருந்தாலோ உடனடியாக தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், சமூக ஊடகங்களில் இது குறித்து எந்தவொரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News