Sep 25, 2026
Thisaigal NewsYouTube
காரில் ஆடவர் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

காரில் ஆடவர் சடலமாக மீட்பு

Share:

காரில் இருந்த 55 வயது உள்ளூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பினாங்கு, ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள ஜாலான் லிந்தாங் மெர்டேகா வில் நிகழ்ந்த இச்சம்பவத்தை துப்புரவுப் பணியாளர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற காரைக் கவனித்து போலீசாருக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்த அந்த ஆடவர், உயிரிழந்து நான்கு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரணமடைந்த ஆடவர் நாள்பட்ட நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும், அவரது மரணத்தில் எவ்வித குற்றவியல் கூறுகளும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்காக உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள வேளையில், இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News