Sep 25, 2026
Thisaigal NewsYouTube
வெனிசுலாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம்
தற்போதைய செய்திகள்

வெனிசுலாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம்

Share:

தென் அமெரிக்க நாடான வெனிசுலா தலைநகர் கராகஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை அடுத்தடுத்து தாக்கிய 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி 32 பேர் உயிரிழந்துள்ளதும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நள்ளிரவையும் தாண்டி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளதோடு, நாட்டின் பல பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related News