ஒருவருக்கு வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்படும் போதுதான் அவரின் உண்மையான விசுவாசமும் ஒழுக்கமும் சோதிக்கப்படும் என்று அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு அம்னோவிலிருந்து புவாட் ஜர்காஷி விலகியதைத் தொடர்ந்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். வேட்பாளர் தேர்வுக்குப் பிறகு கட்சியில் அதிருப்தி ஏற்படுவது அரசியலில் சாதாரண ஒன்றுதான் எனக் குறிப்பிட்ட அவர், உண்மையான போராளி என்பவர் வாய்ப்பு கிடைக்காத போதும் கட்சியின் வெற்றிக்காக உழைப்பவர் என்றார்.
மேலும், இடைக்கால மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபீஸ் காசி தலைமையிலான ஜோகூர் அம்னோ, வேட்பாளர் தேர்வை மிகவும் துணிச்சலாகவும் நேர்த்தியாகவும் கையாண்டுள்ளது என்று பாராட்டிய அஸாலினா, தற்போதைய சூழலுக்கு யார் பொருத்தமானவரோ அவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்றும் தெளிவுபடுத்தினார்.








