Jul 16, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவாசகம் ஓதுதல்
தற்போதைய செய்திகள்

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவாசகம் ஓதுதல்

Share:

வருகின்ற ஜுன் 27 ஆம் தேதி காலை மணி 7.30- க்கு தொடங்கி மாலை மணி 3.30 வரையில் மலேசிய சிவனடியார் திருச்சபை,

மலேசிய நால்வர் மன்றம், மற்றும் ஜாலான் ஆயர் பானாஸ் செதாபாக் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் தேவஸ்தானம் இணைந்து, திருமுறைகளில் ஒன்றான, திருவாசகத்தை முழுவதுமாக ஓதுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

நமது சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமான் பாட, இறைவன் கைப்பட எழுதப்பட்ட 658 பாடல்களை கொண்ட திருவாசகம் என்னும் ஞான பணுவலை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓதுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

மாநில அளவிலான ஐந்தாவது திருவாசக முற்றோதல் தலைநகர் கோலாலம்பூர், கூட்டரசு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஆதலால் சுற்றுவட்டார பொதுமக்கள், அடியார்கள், பக்தர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாது அனைவரும் இறைவனின் திருவருளையும் குருவருளையும் பெறுமாறு அன்புடன் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்காக கிழே கொடுக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related News