Jul 16, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தல்: ஊழல் புகார்களைப் பதிவு செய்ய 5 கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது எஸ்பிஆர்எம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் தேர்தல்: ஊழல் புகார்களைப் பதிவு செய்ய 5 கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது எஸ்பிஆர்எம்

Share:

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், மாநிலம் முழுவதும் ஐந்து கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இம்மாதம் ஜூன் 27-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குவது முதல், ஜூலை 11 ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் வரை இந்தக் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும் என எஸ்பிஆர்எம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்க ஜோகூர் பாரு தலைமையகம் மட்டுமன்றி பத்து பஹாட், குளுவாங், சிகமாட் ஆகிய SPRM கிளை அலுவலகத் தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News