Sep 25, 2026
Thisaigal NewsYouTube
கெடா ஜேபிஜே அதிகாரி எனக்கூறி நூதன மோசடி: லொக்மான் இப்ராஹிம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

கெடா ஜேபிஜே அதிகாரி எனக்கூறி நூதன மோசடி: லொக்மான் இப்ராஹிம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை

Share:

லொக்மான் பின் இப்ராஹிம் என்ற நபர், கெடா மாநில போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே அதிகாரி எனப் போலி முகவரியைக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதன் தலைமை இயக்குநர் ஸ்டீன் வான் லுட்டாம் கேட்டுக்கொண்டார்.

மோசடிப் பேர்வழியான லொக்மான், ஜேபிஜேவின் அதிகாரப்பூர்வ கடித முகப்பைப் பயன்படுத்திப் போலி ஒப்பந்தக் கடிதங்களை தயாரித்து, பல்வேறு நிறுவனங்களிடம் முன்பணம் கேட்டு ஏமாற்றி வருகிறார். இதற்காகத் தனது வெவ்வேறு புகைப்படங்களையும் பல தொலைபேசி எண்களையும் அவர் பயன்படுத்தி வருகிறார் என்றும் லூட்டாம் குறிப்பிட்டார்.

"லொக்மான் பின் இப்ராஹிம் என்ற பெயரில் எந்தவொரு அதிகாரியும் கெடா மாநில போக்குவரத்து இலாகாவில் பணியாற்றவில்லை. எனவே, அவரது பேச்சை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்" என அவர் நிறுவன உரிமையாளர்களையும் பொதுமக்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

Related News