Sep 25, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் துரத்தலின் போது மேம்பாலத்திலிருந்து குதித்த சந்தேக நபர் பலி
தற்போதைய செய்திகள்

போலீஸ் துரத்தலின் போது மேம்பாலத்திலிருந்து குதித்த சந்தேக நபர் பலி

Share:

கோலாலம்பூர், ஜாலான் பந்தாய் டாலாம் பகுதியில் போலீஸ் வாகனங்கள் துரத்திய போது, மேம்பாலத்திலிருந்து கீழே குதித்த சந்தேக நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ரோந்து போலீசார், குற்றச் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் புரோட்டான் வீரா காரைத் துரத்திய போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசிடமிருந்து தப்பியோட முயன்ற அந்த கார், மற்றொரு காரின் மீதும் போலீஸ் வாகனத்தின் மீதும் மோதி நின்றது.

இதனைத் தொடர்ந்து, காரை ஓட்டி வந்த நபர் திடீரென மேம்பாலத்திலிருந்து கீழே குதித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மற்ற இரு பயணிகளில் ஒருவர் காயமடைந்த நிலையில், மற்றொருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

Related News