Jul 10, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய சுற்றுலாக் காலம் 2026' திட்டத்திற்கு ஆதரவாக புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போதைய செய்திகள்

மலேசிய சுற்றுலாக் காலம் 2026' திட்டத்திற்கு ஆதரவாக புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

Share:

மலேசியாவின் உள்நாட்டுத் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும், ‘மலேசிய சுற்றுலாக் காலம் 2026’ திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், மலேசிய சுற்றுலா வாரியம் மற்றும் ‘கேஎல் ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப்’ பேருந்து சேவை நிறுவனம் இணைந்து புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.

கோலாலம்பூர் பிளாசா சுங்கை வாங் வளாகத்தில் அமைந்துள்ள கேஎல் ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் மையத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஒய்.பி. டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் கலந்துகொண்டு இப்பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். மலேசியர்கள் தங்களின் சொந்த நாட்டின் சுற்றுலாத் தலங்களை மீண்டும் கண்டறிந்து ரசிப்பதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்குப் பங்களிக்கும் உள்நாட்டுச் சுற்றுலாவை வலுப்படுத்துவதற்கும் இத்தகைய பொது மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சிகள் அவசியமானவை என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்தச் சிறப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கோலாலம்பூர் நகருக்குள் வலம் வரும் ஆறு ‘கேஎல் ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப்’ பேருந்துகளில் மலேசியாவின் 15 மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பிரதேசங்களின் முக்கிய சுற்றுலாத் தலங்களை விவரிக்கும் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. உதாரணமாக, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஸ்ரீ செந்தாயன் மசூதி மற்றும் பாரம்பரிய மினாங்கபாவ் இல்லம், சரவாக் மாநிலத்தின் முலு மலைச் சிகரங்கள் மற்றும் புகழ்பெற்ற வான்மீன் பறவை போன்ற காட்சிகள் இப்பேருந்துகளில் இடம்பெற்றுள்ளன. மேலும், பயணிகள் எளிதாகத் தகவல்களைப் பெறும் வகையில், 'மலேசிய சுற்றுலாக் காலம் 2026' காலண்டர், பயணச் சலுகைகள் மற்றும் மாநில சுற்றுலா வாரியங்களின் இணையதளங்களை அணுகக்கூடிய விரைவுக் குறியீடுகளும் இந்தப் பேருந்து விளம்பரங்களில் இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 260.1 மில்லியனாக இருந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 21.3 விழுக்காடு அதிகரித்து 290.1 மில்லியனாக உயர்ந்துள்ளதுடன், சுற்றுலாத்துறை மூலமான வருவாயும் 121 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது. இந்த அசுர வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்கவும், கோலாலம்பூரின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் நவீன நகர்ப்புற அனுபவங்களை உலகளாவிய ரீதியில் கொண்டு சேர்க்கவும் இந்தத் திட்டம் பெரும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்