Sep 24, 2026
Thisaigal NewsYouTube
சாலைத் தடுப்பில் தப்பியோட்டம்: போலீஸ் அதிகாரிக்கு கை, காலில் முறிவு
தற்போதைய செய்திகள்

சாலைத் தடுப்பில் தப்பியோட்டம்: போலீஸ் அதிகாரிக்கு கை, காலில் முறிவு

Share:

ஈப்போவில் சாலைத் தடுப்பை மீறி தப்பிச் செல்ல முயன்ற கார் மோதியதில் போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவருக்கு இடது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது.

இன்று காலை 9.45 மணியளவில் ஜாலான் சிலிபின் சாலைத் தடுப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சந்தேக நபர் வாகனத்தை நிறுத்த மறுத்து வேகமாகச் சென்ற நிலையில், மூன்று போக்குவரத்து போலீஸ்காரர்கள் அவரைத் துரத்தினர்.

பேரா அரச செயலக கட்டடத்திற்கு அருகிலுள்ள போக்குவரத்து விளக்கை அடைந்தபோது, இடதுபுறப் பாதையில் சென்ற சந்தேக நபர் திடீரென U-திருப்பம் செய்து போலீஸ் அதிகாரி மீது காரை மோதினார்.

பின்னர் எதிர்திசையில் வாகனத்தைச் செலுத்திய அவர், தாமான் விங் ஓன் போக்குவரத்து விளக்கருகே கட்டுப்பாட்டை இழந்து காரை மோதியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

29 வயது அந்த நபருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதுடன், வாகனத்தின் சாலை வரியும் காலாவதியாகியிருந்தது. சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Related News