பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த சகோதரர் இட்ருஸ் இப்ராஹிம் காலமானார்.
தாயகம் திரும்பும் பயணத்தில் இருந்தபோது தமது சகோதரர் காலமான செய்தி கிடைத்ததாக அன்வார் தெரிவித்துள்ளார்.
தமது வாழ்க்கைப் பயணத்தில் எண்ணற்ற நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட ஒருவரை இழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இட்ருஸ் இப்ராஹிம் விட்டுச் சென்ற நன்மைகளும் நினைவுகளும் தமது குடும்பத்தினரின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
அதேவேளை, தமது சகோதரரின் இறுதி நேரத்தில் அருகில் இருக்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








