கோலா லங்காட், தெலுக் பங்லிமா காராங் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில், இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி ஒருவர் இன்று உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான தகவல் காலை 11 மணியளவில் போலீஸ் துறைக்கு கிடைத்ததாக கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்ட் முஹமட் அக்மால்ரிஸால் ரட்ஸி தெரிவித்தார்.
தலையில் காயமடைந்த நிலையில், உள்ளூர் பெண் தொழிலாளியான அவர் காலை 11.20 மணியளவில் அருகிலுள்ள சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோதே அவர் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் இந்தச் சம்பவத்தில் குற்றச் செயல் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக பந்திங் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், திடீர் மரணம் என்ற வகையில் விசாரிக்கப்படுகிறது.








