Oct 13, 2026
Thisaigal NewsYouTube

காணாமல் போன மகளை மீட்கும் போராட்டம்: இந்திரா காந்தி கூட்டரசு நீதிமன்றம் செல்கிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காணாமல் போன மகளை மீட்கும் போராட்டம்: இந்திரா காந்தி கூட்டரசு நீதிமன்றம் செல்கிறார்

காணாமல் போன தனது மகள் பிரசன்னா டிக்சாவை மீட்பதற்கான நீண்டகாலப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்திரா காந்தி கூட்டரசு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

போலீஸ் துறையும் அரசாங்கமும் தனது முன்னாள் கணவர் கே. பத்மநாபனை கைது செய்யத் தவறியதால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு கோரி அவர் தொடர்ந்த வழக்கை மீண்டும் முன்னெடுக்க அனுமதி கோரி, நேற்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஆகஸ்ட் 24 ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது வழக்கைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திரா வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன், முக்கியமான சட்டக் கொள்கைகள் மற்றும் பொது நலன் சார்ந்த ஆறு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு முன்வைத்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி, அப்போது 11 மாதக் குழந்தையாக இருந்த பிரசன்னாவை பத்மநாபன் அழைத்துச் சென்றார்.

இந்த வழக்கின் நிர்வாக விசாரணை அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →