Jul 15, 2026
Thisaigal NewsYouTube
புவாட் சர்காஷிக்கு எதிராக 153 போலீஸ் புகார்கள்: தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் விசாரணை தீவிரம்!
தற்போதைய செய்திகள்

புவாட் சர்காஷிக்கு எதிராக 153 போலீஸ் புகார்கள்: தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் விசாரணை தீவிரம்!

Share:

ஜோகூர் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் டத்தோ டாக்டர் முகமது புவாட் ஜர்காஷின் சர்ச்சைக்குரிய அறிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் மொத்தம் 153 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநிலப் போலீஸ் தலைவர் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்ஷாத் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 3 மணி வரையிலான நிலவரப்படி இந்த எண்ணிக்கையிலான புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், மேலும் பல புகார்கள் வரக்கூடும் என்றும் அவர் கூறினார். தற்காலிக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் தற்காலிக மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் ஆகியோரால் இன்று காலையிலேயே முதல் இரு புகார்கள் ஜோகூர் பாருவில் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து 1948 ஆம் ஆண்டு தேசத்துரோகச் சட்டப் பிரிவு, , குற்றவியல் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News