May 5, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் 70 வயது மூதாட்டி வெட்டிக் கொலை
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் 70 வயது மூதாட்டி வெட்டிக் கொலை

Share:

ஈப்போ, மே.05-

ஈப்போ, தாமான் டேசா அமான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முஹமட் நஜீப் ஹம்ஸா கூறுகையில், இந்த கொலைச் சம்பவம் குறித்து நேற்று இரவு 10 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உயிரிழந்த மூதாட்டியின் உடல், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்திலிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஓர் அரிவாள் மீட்கப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக 52 வயதுடைய அண்டை வீட்டுக்காரர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் கடந்த பிப்ரவரி மாதம் உலு கிந்தா மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு முஹமட் நஜீப் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

கார்ப்பரேட் மாஃபியா' விசாரணை: போலீஸ் துறை மற்றும் பங்கு பத்திரங்கள் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் - கோபிந்த் சிங் வலியுறுத்து

கார்ப்பரேட் மாஃபியா' விசாரணை: போலீஸ் துறை மற்றும் பங்கு பத்திரங்கள் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் - கோபிந்த் சிங் வலியுறுத்து

தியோ பெங் ஹாக் மரண வழக்கு: கொலை விசாரணையாக நடத்தக் கோரி குடும்பத்தினர் மீண்டும் மனுத் தாக்கல்

தியோ பெங் ஹாக் மரண வழக்கு: கொலை விசாரணையாக நடத்தக் கோரி குடும்பத்தினர் மீண்டும் மனுத் தாக்கல்

குவாந்தானில் 355,000 ரிங்கிட் மதிப்புள்ள 59,000 லிட்டர் டீசல் பறிமுதல்

குவாந்தானில் 355,000 ரிங்கிட் மதிப்புள்ள 59,000 லிட்டர் டீசல் பறிமுதல்

ஹஜ் பயணிகளுடன் சென்ற மலேசிய விமானம் ஓமனில் அவசரத் தரையிறக்கம்

ஹஜ் பயணிகளுடன் சென்ற மலேசிய விமானம் ஓமனில் அவசரத் தரையிறக்கம்

அலோர் காஜா அருகே 8 இந்திய சுற்றுலாப் பயணிகளுடன் வேன் விபத்து – போதைப்பொருள் பயன்படுத்திய ஓட்டுநர் கைது

அலோர் காஜா அருகே 8 இந்திய சுற்றுலாப் பயணிகளுடன் வேன் விபத்து – போதைப்பொருள் பயன்படுத்திய ஓட்டுநர் கைது

தீயணைப்பு வீரர்களின் சேவைக்கு பிரதமர் அன்வார் உயரிய பாராட்டு

தீயணைப்பு வீரர்களின் சேவைக்கு பிரதமர் அன்வார் உயரிய பாராட்டு