Jul 10, 2026
Thisaigal NewsYouTube
தொழிற்சங்க மேம்பாட்டிற்கான 2026-ஆம் ஆண்டு மானியங்களை அமைச்சர் ரமணன் வழங்கினார்
தற்போதைய செய்திகள்

தொழிற்சங்க மேம்பாட்டிற்கான 2026-ஆம் ஆண்டு மானியங்களை அமைச்சர் ரமணன் வழங்கினார்

Share:

தீபகற்ப மலேசியாவில் உள்ள தொழிற்சங்கங்களின் மேம்பாட்டிற்காக, 2026-ஆம் ஆண்டுக்கான தொழிற்சங்க விவகாரத் திட்ட மானியங்களை மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.

தொழிற்சங்க உறுப்பினர்களின் பயிற்சி, கல்வி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்காக 325 தொழிற்சங்களுக்கு மொத்தம் 2.88 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், மலேசியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் வெறும் 6 விழுக்காட்டினர் மட்டுமே தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளதாகக் குறிப்பிட்டார். தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொழிற்சங்கங்கள் நீண்டகால தளமாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதோடு, மனித வள அமைச்சு எப்போதும் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளுக்கு முதலிடம் வழங்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்த ஆண்டுக்கான 2.8 மில்லியன் ரிங்கிட் மானிய நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, அதன் நிர்வாக அறிக்கைகள் முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டால், வரும் 2027-ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் உறுதியளித்தார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்