கோலாலம்பூர், ஜின்ஜாங் உத்தாராவில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பிரம்புகள் போன்ற அபாயகரமான ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு பதின்ம வயதினர் உட்பட 13 ஆடவர்கள், இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தங்களின் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
கடந்த ஜூன் 11 அன்று மதியம் 3.27 மணியளவில் ஜின்ஜாங் உத்தாராவில் உள்ள மின்சாரக் கடை ஒன்றின் முன்னால் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
குற்றவியல் சட்டம் 148-இன் கீழ் கொண்டுவரப்பட்ட இக்குற்றச்சாட்டை விசாரித்த மாஜிஸ்திரேட் இல்லி மரிஸ்கா காலிசான், குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு தலா 4,500 ரிங்கிட் ஜாமீனும், மற்ற 10 பேருக்கு தலா 5,500 ரிங்கிட்டும் ஜாமீனும் வழங்கி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 13-க்கு ஒத்திவைத்தார்.








