Jun 23, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் பிறந்தாலும் தானாகவே குடியுரிமை கிடைக்காது: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் பிறந்தாலும் தானாகவே குடியுரிமை கிடைக்காது: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

Share:

மலேசியாவில் பிறந்த ஒரு குழந்தை, தன் உயிரியல் பெற்றோர்கள் யார் என்று தெரியாத பட்சத்திலும், தன்னிடம் வேறு நாட்டின் குடியுரிமை இல்லை என்பதற்கான ஆதாரம் இல்லாதவரையிலும், இங்கு பிறந்த காரணத்திற்காக மட்டுமே மலேசியக் குடியுரிமையைப் பெற முடியாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஜீஸ் தலைமையிலான நீதிபதிகள் குழு, 2009-இல் பிறந்து, தற்போது 'எல்.டபிள்யூ.ஓ.' என அடையாளப்படுத்தப்பட்ட சிறுவனுக்கு உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த குடியுரிமைத் தீர்ப்பை ரத்து செய்து அரசாங்கத்தின் மேல்முறையீட்டை அனுமதித்தது.

அவனது 12-ஆவது வயதில் மைக்காட் விண்ணப்பத்தின் போது, தேசியப் பதிவுத்துறையான ஜே.பி.என். நடத்திய விசாரணையில் வளர்ப்புப் பெற்றோர்கள் போலி விபரங்கள் அளித்தது அம்பலமானது. மலேசிய அரசியலமைப்பின்படி குடியுரிமை பெற வம்சாவளி மற்றும் பெற்றோர் சார்ந்த தகுதிகள் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதால், பெற்றோரின் விபரங்கள் இல்லாத பட்சத்தில் குடியுரிமை கோர முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Related News