Jun 23, 2026
Thisaigal NewsYouTube
சீனாவில் சர்ச்சை வீடியோ: போலீஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை
தற்போதைய செய்திகள்

சீனாவில் சர்ச்சை வீடியோ: போலீஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை

Share:

சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது அங்குள்ள உள்ளூர் மக்களை அவமதித்ததாகச் சமூக ஊடகங்களில் வைரலான பெண் போலீஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்

சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி ஒரு சமூக ஊடக இன்ஃப்ளூயன்ஸர் ஆவார். அவர் பொது இடத்தில் மூக்கை மூடிக்கொண்டு முறையற்ற வார்த்தைகளைப் பேசிய வீடியோ வெளிநாட்டு ஊடகங்கள் வரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சீருடையில் இல்லாவிட்டாலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போலீஸ் துறை விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என நினைவூட்டிய ஐ.ஜி.பி., விசாரணை முடியும் வரை அவர் பணியில் நீடிப்பார் என்றார்.

இதற்கிடையில், மலேசிய ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய ஐஜிபி, கடந்த 17 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாத தியாகிகளுக்கான 'வீரர் உதவித்தொகை அலவன்ஸ் தொகை விகிதத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Related News