Jun 23, 2026
Thisaigal NewsYouTube
காஜாங் சுங்கை ராமல் சுங்கச்சாவடியில் பெயிண்ட் ஏற்றிச் சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது
தற்போதைய செய்திகள்

காஜாங் சுங்கை ராமல் சுங்கச்சாவடியில் பெயிண்ட் ஏற்றிச் சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது

Share:

காஜாங் ஜாலான் ரெக்கோ நோக்கிச் செல்லும் சுங்கை ராமல் டோல் சாவடியில் இன்று பிற்பகலில் பெயிண்ட் ஏற்றிச் சென்ற மூன்று டன் லாரி ஒன்று தீப்பற்றி எரிந்தது.

மதியம் 2.55 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, பாங்கி தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

இவ்விபத்தில் லாரியின் முன்பகுதி 80 விழுக்காடு சேதமடைந்ததோடு, அங்குள்ள டோல் சாவடியும் சுமார் 90 விழுக்காடு தீக்கிரையானது. மாலை 3.40 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வேளையில், இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனச் சிலாங்கூர் தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News